slideshow

Wednesday, July 25, 2012

விநாயகர் அகவல்-Vinayakar agaval

விநாயகர் அகவல்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை       
இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மறந்தனை 
ஞானக் கொழிந்தினை 
உன்அடிபோற்றுகின்றேனே!

சீதக் களபச் செந்தா மைரைப்பூம் 
பாதச் சிலம்பு பல இசை பாடப் 
பொன் அரை ஞாணம் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 
வேழ முகமும் விளங்கு செந்தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் 
நானற வாயும் நாலிரு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் 
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரிய மெய் ஞான 
அற்புதன் ஈன்ற கற்பகக் களிரே 
முப்பழம் முகரும் மூடிக வாகனே 
இப்பொழுதென்னை யாட்கொள்ள வேண்டித் 
தாயாய் எனக்குத் தானெழு ந்தருளி 
மாயாப் பிறவி மயக்க மறுத்தே 
திருந்திய முதல் ஐந்தெழுதுத்துந் தெளிவாய்ப் 
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து 20


குருவடி வாகிக் குவளையந்  தன்னில் 
திருவடி வைத்துத் திறமிது பொருள் என 
வாடா வகைதான் மகிழ்தென க்கருளிக
கோடா யுதத்தாற்    கொடுவினைக் களைந்தே 
உவட்டா உபதேசம் புகட்டி இன் செவியில் 
தெவிட்டாத  ஞானத்தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்  
கருவிக லொடுங்குங் கருத்தினை யறிவித்து 
இருவினைத் தன்னை அறுத் திருள் கடிந்து 30

தலமொருந் நான்குந் தந்தெனக்கருளி 
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆறா தாரத் தங்கிசை நிலையும் 
பேறா  நிறுத்திப் பேச்சுரை யறுத்தே  
இடையிங் கலையின் எழுத்தறி வித்துக் 
கடையிற் கழுமுனைக் கபாலமும் காட்டி 
மூன்று மண் டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலாதாரத்தின் மூண்டெழு கனாலக் 
காலால் எழ்ப்புங் கருத்தறி வித்தே 
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையம்
உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டுச் 
சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும் 
எண்முக மாக இனிதெனக் கருளிப் 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரியெட்டு நிலையும் தெரிசெனப் படுத்திக் 
கருத்தினிற் கபால வாயிலும்  காட்டி  
இருத்தி முத்தி இனிதெனக் கருளி 
என்னை அறிவித்த்தெனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்தே 
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து 
இருள்வெளி யிரண்டிற் கொன்றிடமென்ன 
அருள் தரும் ஆனந்த தமளித்து என் செவியில் 60

எல்லை இல்லா ஆனந்த மளித்து 
அல்லல் கலைந்தே அருள் வழிகாட்டிச்  
சத்தத்தி னுள்ளே  சதாசிவம் காட்டி 
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி 
அணுவிற் கணுவாய் அப்பாலுங் கப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி 
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடுமைத் தொண்டர் குழாத்துடன் கூட்டி 
அஞ்சக் கரத்த்தின் அரும் பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலை யறிவித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்
வித்தாக விநாயக விரைகழல் சரணே 

3 comments:

  1. Thanks to the viewer from Bangaluru for visiting this blog.This is personally written by me.I belong to Ganapathi Agraharam in Thanjavur district. There is Mahaganapthi temple at Ganapathi Agraharam.The Pillayar was said to have installed by Agastiya Mamamunivar.May the Pillayar bless you.

    ReplyDelete
  2. A visitor from Permataung Pauh,Pulau Pinang viewed this post 11 minutes ago

    ReplyDelete